பருப்பு உருண்டை குழம்பு | Paruppu urundai kulambu in tamil | how to make Dal sponge curry

பருப்பு உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள்:

  1. துவரம் பருப்பு- 250 கிராம்
  2. கடலைப் பருப்பு - 25 கிராம்
  3. வெந்தயம்-சிறிதளவு 
  4. மிளகாய் வற்றல் - 5
  5. புளி - சிறிய நெல்லிக்காய் அளவு 
  6. மல்லி விதை- 25 கிராம் 
  7. அரிசி மாவு - அரை ஸ்பூன்
  8. மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
  9. பெருங்காயம் - சிறிது 
  10. கடுகு - சிறிதளவு 
  11. தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
  12. உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை :

  • முதலில் துவரம் பருப்பை நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • பின்பு மிளகாய் வற்றல், மல்லி விதை, கடலை பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊறவைத்து கரைத்து வைத்துக்கொள்ளவும். 
  • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கரைத்த புளியை விட்டு கொதிக்க விடவும்.
  • துவரம் பருப்பு ஊறியவுடன் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். துவரம் பருப்புடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம், பின்பு கெட்டியான பதத்தில் உள்ள அந்த அரைத்த கலவையை உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • புளியுடன் சேர்த்து மஞ்சள் பொடி போட்டு வேக வைக்கவும், அது வேகும் பொழுது அரிசிமாவை சிறிது தண்ணீர் விட்டு கையால் நன்கு கரைத்து விடவும். மிகவும் கெட்டியான பதத்தில் இருந்தால்
  • சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். 
  • தேங்காய் எண்ணெயில் தாளித்து இறக்கவும்.
  • சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்.

Comments