Husband and wife jokes tamil


ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள்.
யார் அந்த முதலைகள்  நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி  ரூபாய் பரிசு என்று.
அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒருவன் 露‍♂ மட்டும் குளத்தில் குதித்து மறு கரையை அடைந்தான்.
அவனுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. 
உடனே அவன் கூட்டத்தினரை பார்த்து கேட்டான்.... யார்டா என்னை குளத்தில் தள்ளி விட்டது?
கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர்.‍‍‍‍‍‍‍‍‍
அந்த கூட்டத்தில் இருந்த அவன் மனைவி மட்டும் அவனைப் பார்த்து சிரித்தாள்.
நீதி : ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்
_______________________________________
Husband: என்ன டின்னர்?
Wife: *மதியம் மிச்சமான சோத்துல முட்டையை, மிளகு போட்டு தாளிச்சு வச்சு இருக்கேன்..*
Husband: எனக்கு பசிக்கலை.!

அடுத்த நாள்..
Husband: என்ன டின்னர்?
Wife: *பெப்பர் எக் ஃப்ரைட் ரைஸ்*
Husband: அட சூப்பர்.!

*நீதி*:
சோறு வைக்கிறது பெருசு இல்லை...
அதுக்கு பேரு வைக்கறது தான் பெருசு.!

__________________________________________
Wife:- :ஏங்க எனக்கு வீட்டு வேலை பார்க்க மாச மாசம் சம்பளம் வேணும்..
Me்:::எவ்வளவு வேணும்?..
Wife:- 10000 ரூவா வேணும்..
Me:- - இப்படி வந்து உக்காரு..இந்த கால்குலேட்டரை புடி..
Wife:- சொல்லுங்க..
Me:- - ஊர்ல இருக்க உன் சொந்தக்காரனுக்கு எல்லாம் நீயே போன் பண்ணி பேசிறது இல்லாம உங்க அம்மா அப்பா போன் நெம்பர் முதல் கொண்டு உங்க வீட்டு DTH வரைக்கும் ரீசார்ஜ் பண்றீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..
Wife:- போட்டேங்க..
Me:- - உன் தம்பி வண்டிக்கு பெட்ரோல் போடவும்,உன் தங்கச்சி கை செலவுக்கும் எனக்கே தெரியாம என் பாக்கெட்ல ஆட்டையை போட்டு தர்றீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..
Wife:- ம்..போட்டேங்க..
me: - உடம்பு சரியில்லாம இருக்க உன் சொந்தக்காரன்,வர
ுஷக்கணக்கா இழுத்துட்டு கெடக்குற உன் தாத்தானுக்கு எல்லாம் ஆப்பிள்,ஆரஞ்சுனு கலர் கலரா அடிக்கடி வாங்கிட்டு போயி கொடுக்குறீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..
Wife:- ம்ம்..போட்டேங்க..
Me:- - உன் மொகர கட்டைக்கு பேஷியல் பண்றேன்,தலைக்கு கலரிங் அடிக்கிறேன்னு மாசம் ரெண்டு தடவை பியூட்டி பார்லர் போறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..
Wife:- ம்ம்ம்..போட்டேங்க..
Me: - நீ பார்க்கு,பீச்சு,சினிமானு சுத்தனும்கிறதுக்காக நம்ம பையனை உசுப்பி விட்டு வீக்கெண்ட் ஆனா என்னை கூட்டிட்டு போயி அங்க தண்டம் வெக்குறீல்ல..அந்த வகைல ஒரு 4000 ரூவா போடு..
Wife:- ம்ம்ம்ம்..போட்டேங்க..
me:- - எங்க அம்மா கூட உனக்கு சண்டை வர்றப்ப எல்லாம் உப்பையும்,காரத்தையும் அதிகமா போட்டு அவங்களை அப்பப்போ ஹாஸ்பிட்டல் அனுப்புறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..
wife :- ம்ம்ம்ம்ம்..போட்டேங்க..
Me: - பத்து பைசா பிராயஜனம் இல்லாத பிரச்சனைக்கு எல்லாம் தாம்தூம்னு குதிச்சு என்னை டென்ஷன் பண்ணி டாஸ்மாக் பக்கம் தலை தெறிக்க ஓட விடுறீல்ல.. அந்த வகைல ஒரு 2500 ரூவா போடு..
Wife:- ம்ம்ம்ம்ம்ம்..போட்டேங்க..
Me: - மொத்தம் எவ்வளவு ஆச்சு?..
Wife:- 15000 ரூவா..
Me :- நீ என்ன சம்பளம் எதிர்பார்த்த?..
#wife:- 10000 ரூவா..
#me:- - இப்போ அந்த மீதி 5000 ரூவாய கரெக்ட்டா 1 ந்தேதிலருந்து 5 ந்தேதிக்குள்ள உங்கொப்பன் வீட்டுலருந்து வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுக்குற..

Comments