Skip to main content
மிளகு ரசம் | how to make pepper soup in tamil | how to make pepper rasam | rasam recipes in tamil |
மிளகு ரசம்
தேவையான பொருட்கள்:
- தக்காளி பழம் - 2
- மிளகு - 10
- மிளகாய் வற்றல்-2
- மல்லி விதை - 20 கிராம
- கடலைப் பருப்பு - 20 கிராம்
- வெந்தயம்- சிறிது
- பெருங்காயத்தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு - ருசிக்கேற்ப
- புளி - எலுமிச்சை பழ அளவு
- கறிவேப்பிலை, கடுகு, மல்லி இலை- சிறிது
செய்முறை:
- மசாலா: மிளகாய் வற்றல், மல்லி, வெந்தயம், மிளகு, கடலைப்பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுக்காமல் அப்படியே மிக்ஸியில் அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- புளியை கரைத்து பாதி வேகும் போது தக்காளி நறுக்கி போட்டு மசாலா தூள் பெருங்காயத்தூள் போட்டு தேவைக்கேற்ப உப்பு போட்டு தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து மல்லி இலை போட்டு இறக்கவும்.
- குறிப்பு: மசாலா வாசனை நன்கு போகும் அளவிற்கு கொதிக்க விடவேண்டும்.
- இந்த ரசம் காய்ச்சல், பித்த நோய், சளி, கபம், இருமல் உள்ளவர்களுக்கு மிக நல்லது.
Comments
Post a Comment