கோதுமை ரவை உப்புமா | சம்பா ரவை உப்புமா | easy breakfast recipes in tamil | healthy breakfast recipes in tamil | wheat rava upma in tamil | Rava upma in tamil

கோதுமை ரவை உப்புமா | சம்பா ரவை உப்புமா

தேவையான பொருட்கள்:

  1. பெரிய வெங்காயம்-1
  2.  தக்காளி-1
  3.  பச்சை மிளகாய்-2
  4.  தேவையென்றால் காய்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
  5. கேரட்,பீன்ஸ்,பட்டாணி-தேவையானவை
  6.  உப்பு-தேவையான அளவு 
  7. எண்ணெய்-தேவையான அளவு
  8.  கடுகு,கருவேப்பிலை-தாளிக்க
  9. கோதுமை ரவை-ஒரு கப்


செய்முறை:


  • குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
  • பின்பு வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் போட்டு வதக்கி கொள்ளவும்.
  • பின்னர் காய்களை சிறிதாக நறுக்கி அதனுடன் போட்டு வதக்கவும்.
  •  காய்கள் வதங்கிய பின் அதோடு கோதுமை ரவையையும் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு கலந்து குக்கரை மூடி 3 விசில் விடவும்.
  • சுவையான கோதுமை ரவை உப்புமா தயார்.

Comments