சமையல் டிப்ஸ் | Cooking tips | Cooking tips in tamil |சமையலறை குறிப்புகள்

சமையல் டிப்ஸ்:

  1. எலுமிச்சை சாறு சேர்க்கும் பதார்த்தங்களுக்கு பச்சை மிளகாயை சேர்த்தால்தான் ருசியாக இருக்கும் வற்றல் மிளகாய் ஏற்றதில்லை.
  2. தக்காளிப் பழங்கள் இரண்டு நாள் வரை கெட்டுப் போகாமல் இருக்க அவற்றை சிறிதளவு உப்பு கரைத்த நீரில் போட்டு வைக்கலாம்.
  3. கருவேப்பிலை ,கொத்தமல்லி இலைகள் பச்சையாக சாப்பிடுவது தான் நல்லது .அப்போதுதான் அதில் உள்ள வைட்டமின்கள் அழியாமல் இருக்கும்.
  4. மழைக்காலத்தில் சுலபமாக ஜீரணமாகக்கூடிய பத்திய உணவை தயாரித்து உண்பது உடல் நலத்திற்கு ஏற்றது.
  5. சில சமயங்களில் புட்டியின் மூடி திறக்க முடியாமல் இருக்கும். ஈரத்துணியால் மூடி இறுகப் பற்றிக்கொண்டு திருகினால் சுலபமாகக் கழன்று விடும்.
  6. மசாலாப் பொருள்கள் மணமாகவும் ருசியாகவும் இருப்பதால் அன்றாடம் சமையலில் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மசாலாப் பொருள்கள் ஜீரண நீர் சுரப்பிகளைக் பாதிக்கக்கூடியவை.
  7. பால் காய்ச்சுவதற்கு என்று பாத்திரம் தனியாக இருக்க வேண்டும். அதை வேறு எதற்கும் உபயோகப்படுத்தக்கூடாது. தயிர், மோர் வைக்கும் பாத்திரங்களும் தனியே இருப்பதுதான் நல்லது. மணம் மாறாமல் இருக்கும்.
  8. எலுமிச்சம் பழத்தை சற்று நேரம் வெந்நீரில் போட்டு எடுத்து சாறு பிழிந்தால் நிறையச் சாறு வரும். பிழிவதற்கும் சுலபமாக இருக்கும்.
  9. காய்கறிகளை வேகவைக்கும்போது உப்பு சேர்த்து வேக விட வேண்டும். அப்போதுதான் உப்பு பிடிக்கும். ஆனால், கிழங்குகளுக்கு அப்படி செய்தால் வேகாது. வெந்த பிறகே உப்பு சேர்க்க வேண்டும்.
  10. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு தான் பொதுவாக தாளிப்பது வழக்கம். ரசத்துக்கு மட்டும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு தாளித்தால் நல்ல மணமாக இருக்கும்.

Comments