Skip to main content
Home Cleaning, Clothes Washing tips in tamil
Home Cleaning tips in tamil
- வெதுவெதுப்பான சூட்டில் உள்ள நீரில் துணிகளை சலவை செய்தல் அழுக்குகள் எளிதில் போகும், அதிக சூடுள்ள தண்ணீரை பயன்படுத்தினால் அழுக்குகள் துணிகளில் பற்றிக் கொண்டுவிடும்.
- சமையலறையில் அழுக்குப் படிவது சகஜம். சில சமயங்களில் பிசுக்கென்று ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் சிறிது மண்ணெண்ணெயை தெளித்து சற்று நேரம் ஊறவிட்டு பின் தேங்காய் நாரினால் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.
- காபி டிக்காஷன் இறக்கிய பிறகு தூர எறிந்துவிட வேண்டாம். வெயிலில் காயவைத்து சிறிதளவு தவிடும் சீயக்காயும் சேர்த்து வைத்துக் கொண்டால் எவர்சில்வர் பாத்திரங்களை துலக்க உதவும். வீட்டில் ரோஜா செடி இருந்தால் அதற்கு உரமாக போடலாம்.
- வெள்ளிப் பாத்திரத்தைத் தேய்க்க கடுகை அரைத்துப் பயன்படுத்தினால் பள பள என்று இருக்கும். வெள்ளியில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
- அடுப்பில் வைத்துச் சமைக்கும் பாத்திரத்தின் அடியில் கொஞ்சம் அரிசி மாவை நீர் விட்டுக் குழைத்து பூசுவது நல்லது. பாத்திரத்தில் படியும் கரையை சுலபமாக அகற்ற இது உதவும்.
- சட்டை காலரிலும் அக்குள் பகுதியிலும் படிந்த அழுக்கு சுத்தமாக நீங்கா விட்டால், தலைக்கு உபயோகப்படுத்தும் சாம்புவின் சிறிது எடுத்து அதன்மேல் ஊற்றி நன்கு கசக்க அழுக்கு நீங்கி பளிச்சிடும்.
- தரையில் எண்ணெய் சிந்தி பிசுக்கு ஏற்பட்டால் அதன் மேல் கோதுமைத் தவிட்டை தூவி பெருக்கிவிட்டால் தரை பிசுக்கு நீங்கிச் சுத்தமாகிவிடும்.
- வாழைப்பூ நறுக்குவதால் கைகளில் படியும் துவர்க்கரையை வினிகர் கலந்த நீரில் கழுவினால் நீங்கும்.
- உடம்பில் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்க ஆவாரம் பூவைக் கொண்டு வந்து நிழலில் உலர்த்தி பொடி செய்து, குளிக்கும்போது தேய்த்து குளிக்க , நாற்றம் நீங்கும்.
- ரத்தக் கறை படிந்த துணிகளை உப்புக் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து துவைத்தால் கறைகள் நீங்கிவிடும்.
Comments
Post a Comment