Skip to main content
மோர் குழம்பு( புளிசேரி) | buttermilk recipes | buttermilk curry in tamil |மோர் குழம்பு செய்வது எப்படி
மோர் குழம்பு( புளிசேரி)
தேவையான பொருட்கள் :
- கெட்டித் தயிர் - 2 கப்
- தேங்காய் - ஒன்று சிறியது
- பச்சை மிளகாய்- 2
- மிளகாய்வற்றல்- 4
- கடுகு - சிறிதளவு
- தேங்காய் எண்ணெய்- தேவைக்கேற்ப
- உப்பு - ருசிக்கேற்ப
- கறிவேப்பிலை- வாசனைக்கு வெண்டைக்காய், வெள்ளரிக்காய், மாங்காய், சேப்பங்கிழங்கு - இவற்றில் விருப்பம்போல் போடவும். (காய்கறிகளில் விருப்பத்திற்கேற்ப சீசனுக்கு ஏற்பவும் இதில் எதையாவது அல்லது கிடைப்பதை பயன் படுத்தலாம்).
செய்முறை :
- தேங்காய், பச்சை மிளகாய், வற்றல் இவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து நடுத்தர அளவில் நறுக்கி வேக வைக்கவும்.
- காய்கறிகள் வெந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தயிரை விட்டு உப்பு சேர்த்து நன்கு சூடு செய்யவும்.
- நன்கு கொதிக்க வைத்து பின் இறக்கி விடவும்.
- பின்பு கடுகு, கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் தாளித்து இறக்கினால் மோர் குழம்பு (புளிசேரி) உண்ணுவதற்குத் தயார்.
Comments
Post a Comment