Benifits of Urad dhall rice

*பெண்களின் இடுப்பு எலும்புகள் பலம்பெற உளுந்து சாதம்*

*தேவையான பொருட்கள்*
*1,பூங்கார் அரிசி - 300 கிராம்*
*2.தோலுடன் உள்ள உளுந்து-150 கிராம்*
*3.சீரகம்-10 கிராம்*
*4.நாட்டுபூண்டு-20 கிராம்*
*5.உப்பு-தேவையான அளவு*
*6.இளந்தேங்காய் துறுவல்-1கப்*
*செய்முறை*

*ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.  அதில் அரிசி,* *தேவையான உப்பு மற்றும் உளுந்தைச் சேர்த்து வேக வைக்கவும்.* 
*ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், தட்டிய பூண்டு, சிறிது கறிவேப்பிலை சேர்த்து வேக வைத்த சாதத்தில் கலந்து தேங்காய் துறுவல் சேர்த்து இறக்கவும்.*

*இந்த சாதம் பெண்களுக்கு மிகவும் நல்லது.அந்த காலங்களில் வாரம் ஒரு முறை யாவது பூப்படைந்த பெண்ணிற்கு தயார் செய்து கொடுப்பது வழக்கம் மாதவிடாய் காலங்களில் இடுப்பு வலி குறையும்* *பெண்களின் இடுப்பு எலும்புகள் பலம்பெற இது மிகவும் உதவியாக இருக்கும்*.
*வாழ்க வையகம் வாழ்க வளமுடன்*

Comments