பேபிகார்ன் ஃப்ரை | Babycorn Fry Procedure in Tamil | Babycorn recipe in tamil
பேபிகார்ன் ஃப்ரை
தேவையானவை:
- பேபிகார்ன் - 5
- சோள மாவு - அரை கப் மிளகாய்த்தூள் - சிறிதளவு
- கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - சிறிதளவு
- எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை:
- பேபி கார்னை நீளவாக்கில் சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
- அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் பேபிகார்னை போட்டு ஓரிரு நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
- அதன் பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின்னர் சோள மாவில் போட்டு புரட்டி எடுக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பேபிகார்னை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
Comments
Post a Comment