பருப்பு ரசம் செய்முறை தமிழில் | Parrupu Rasam in Tamil

பருப்பு ரசம்

தேவையான பொருட்கள்:

  • காய்ந்த மிளகாய்-3
  • மிளகு - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • தனியா - அரை தேக்கரண்டி
  • புளி - சிறிதளவு
  • தக்காளி-1
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை- தேவையான அளவு
  • தாளிக்க - கடுகு, சீரகம்

செய்முறை:

  • மிளகு, சீரகம், மல்லி, மிளகாய் இவைகளை பொடியாக்கிக் கொள்ளவும்.
  • புளியை நன்கு கரைத்து வாணலியில் ஊற்றி உப்பு தக்காளி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பின்பு பொடியை அதில் சேர்க்கவும்.
  • லேசாக பொங்கும்போது துவரம் பருப்பு தண்ணீர் ஊற்றி, ஒரு லேசான கொதி வந்த பின்பு இறக்கி விடவும்.
  • பிறகு வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து ரசத்தில் மேல் போட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு அரை டம்ளர் பச்சைத் தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிட்டால் அற்புதமான ரசம் தயார்.

Ingredients for Paruppu Rasam :

  • Dried chillies -3
  • Pepper - half teaspoon 
  • Cumin - half teaspoon 
  • Coriander- half teaspoon 
  • Tamarind - little 
  • Tomatoes -1 
  • Salt - required amount 
  • Curry leaves - required amount 
  • For Oil Fry : Little mustard, cumin


Recipe :

  • Grind pepper, cumin, coriander, chilli.
  • Dissolve the tamarind well and pour it into the skunk and add salt tomatoes and add the powder to it. 
  • Pour lukewarm water and drop it after a mild boil.
  • Then leave the oil in the skunk and put the cumin on top of the curry leaves and coriander leaves and pour half a glass of water and boil for 5 minutes .

Comments