முட்டை குழம்பு செய்வது எப்படி | How to Prepare Egg gravy in tamil | Egg kulambu in tamil

முட்டை குழம்பு

தேவையான பொருட்கள்:

  1. முட்டை - 4
  2. பட்டை - 1
  3. கிராம்பு -2
  4. சோம்பு - சிறிதளவு வெங்காயம் - 4
  5. தக்காளி -2
  6. தேங்காய் துருவல்- கால் கப்
  7. மிளகாய் தூள்- காரத்திற்கேற்ப
  8. மல்லி தூள்-2 ஸ்பூன் எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

  • கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு முதலியவற்றை போட்டு தாளிக்கவும்.  
  • வெங்காயம், தக்காளி, தேங்காய், மிளகாய் தூள், மல்லித்தூள்முதலியவற்றை போட்டு வதக்க வேண்டும்
  • இப்பொழுது இதை ஆற விட வேண்டும். அதற்குப்பிறகு மிக்ஸியில் போட்டு அதனை அரைத்துக் கொள்ள வேண்டும். 
  • இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
  • சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது 1 வெங்காயம், 1 தக்காளியையும் போட்டு வதக்க வேண்டும்.
  • இப்பொழுது ஏற்கனவே மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கொட்டி தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்றாக கொதித்த பிறகு அடுப்பை சிம்மில் வைத்து ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றவேண்டும்.
  • இப்பொழுது மூடி வைத்து 5 நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.

இறுதியில் சிறிது கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும்.
சுவையான முட்டை குழம்பு தயார்.

Comments