சிக்கன் குழம்பு செய்வது எப்படி| How to make chicken gravy | Steps to make chicken kulambu in Tamil

சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

  1. சிக்கன் - அரை கிலோ
  2. வறுத்து அரைக்க :
  3. பட்டை- 2
  4. கிராம்பு-2
  5. சோம்பு - சிறிதளவு 
  6. சீரகம் - சிறிதளவு 
  7. மிளகு - சிறிதளவு 
  8. தக்காளி - 1
  9. வெங்காயம் - 3
  10. கசகசா - சிறிதளவு 
  11. மல்லித் தூள்- தேவையான அளவு

தாளிக்க:

    1. பட்டை -2
    2. கிராம்பு-2
    3. கருவேப்பிலை- தேவையான அளவு
    4. வெங்காயம்-1 
    5. தக்காளி-1
    6. மல்லித்தூள்- தேவையான அளவு
    7.  மிளகாய்த்தூள்- தேவையான அளவு
    8.  மஞ்சள் தூள்- தேவையான அளவு 
    9. உப்பு - தேவையான அளவு
    10. எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    1. முதலில் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
    2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சோம்பு கருவேப்பிலை போட்டு தாளித்து அதன் பிறகு வெங்காயம் தக்காளி போட்டு வதக்க வேண்டும்.
    3. இப்பொழுது வாங்கி வைத்துள்ள சிக்கனை நன்கு கழுவி அதனுடன்  மிளகாய்த்தூள் மல்லித்தூள் போட்டு வதக்க வேண்டும். 
    4. பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை இதில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
    சிக்கன் வேகும் வரை கொதிக்கவிடவும் சுவையான சிக்கன் குழம்பு தயார்.

    Comments