ப்ரைட் ரைஸ் செய்முறை | Fried rice in Tamil | How to make fried rice

ப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள்

  1. சாதம் - 3 கப்
  2. கேரட் - 1
  3. பீன்ஸ் - 7
  4. பெரிய வெங்காயம் - 1    பட்டை - 2 துண்டு கிராம்பு - 3
  5. பச்சை மிளகாய் - 4
  6. இஞ்சி - சிறிதளவு பூண்டு - 10
  7. சோம்பு - முக்கால் தேக்கரண்டி
  8. எண்ணெய் - தேவையான அளவு
  9. உப்பு - தேவையான அளவு

செய்முறை

  1. முதலில் கேரட் மற்றும் பீன்ஸை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  2. வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
  4. அதில் பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸை போட்டு வேகவிடவும்.
  5. காய்கள் வெந்தவுடன் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  6. மிக்ஸியில் பூண்டு பச்சைமிளகாய் சோம்பு இஞ்சி போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  7. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சோம்பு போட்டுத் தாளித்துக் கொள்ள வேண்டும்.
  8. அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  9. வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  10. அதனுடன் வேகவைத்த கேரட் பீன்ஸ் உப்பு முதலியவற்றை போட்டு கிளற வேண்டும்.
  11. அதில் வேக வைத்த சாதத்தை போட்டு நன்கு கிளறிவிடவும்.
  12. மேலே இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி ஒன்றாக கிளறிவிடவும்.
  13. அதன் மேலே கொத்தமல்லி இலை தூவி கிளறி பரிமாறவும்.
சுவையான ஃப்ரைட் ரைஸ் தயார்.

Comments