எது வெற்றி???|what is success???

 எது வெற்றி ???what is success???


Vetri_Success_Tamil


'4 வயதில்', தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !
'8 வயதில்', தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
'12 வயதில்', நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
'18 வயதில்', வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
'22 வயதில்', பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
'25 வயதில்', நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
'30 வயதில்', தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
'35 வயதில்', போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
'45 வயதில்', இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !
'50 வயதில்', தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
'55 வயதில்', நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
'60 வயதில்', ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
'65 வயதில்', நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
'70 வயதில்', மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
'75 வயதில்', பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
'80 வயதிற்கு மேல்' மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !
    தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?
  • அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..
  • அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..
  • துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..
  • பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..
  • சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..
  • நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..

     ஆகவே தோற்று போ,தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
     அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..

Comments