அதிமுக அரசு - நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் : பகுதி 1

அதிமுக அரசு - நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் : பகுதி 1

2016 தேர்தலின் போது,  மற்ற கட்சிகளைப் போல் எதார்த்தத்தை மீறிய வாக்குறுதிகளை அளிக்காமல் , கவனமாகவும் பொறுமையகவும் தனது தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டிருந்தது . அவற்றுள் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட சில வாக்குறுதிகளை , ஆட்சிக்கு மீண்டும் வந்த சில நாட்களிலேயே  கையில் எடுத்து நிறைவேற்ற தொடங்கியது பாராட்டுக்குரியது.

1.படிப்படியாக மதுவிலக்கு :

2011 தேர்தலில் மின்வெட்டு எந்த அளவுக்கு முக்கியமான பிரச்னையாக பேசப்பட்டதோ அதே அளவுக்கு இந்த தேர்தலில் மதுவிலக்கு பேசப்பட்டது.  மதுவிலக்கு படிபடியாக அமலுக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்ததோடு அல்லாமல் , முதல் அறிவிப்புகளில் ஒன்றாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் கடைகளின் இயங்கும் நேரத்தை 12.00 PM  முதல் 10 PM  என்று குறைக்கப்படும் என்றும் அறிவித்து , அடுத்த 15 நாட்களைக் அதை அமல்படுத்தவும் செய்தது , அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பையும் பெற்றது. வருமானம் குறைவான கடைகள்தான் மூடப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும் , 6300 கடைகளில் 500 கடைகளை ஒரே  நேரத்தில் மூடுவது என்பது , ஒரு தைரியமான முடிவு என்பது அனைவருக்கும் தெரியும். இனி  வரும் நாட்களில் , இந்த படிப்படியாக குறைக்கும்  நடவடிக்கை தொடரும் என்பதே அனைவரது நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு.

2.100 யூனிட்  இலவச மின்சாரம் :

100 யூனிட் இலவச மின்சாரம் அறிவிப்பும், முதல் 5 கையெழுத்துகளில் ஒன்றாக இடம் பெற்றிருந்தது  . இந்த அறிவிப்பு நடுத்தர மக்களிடம் ஓரளவு வரவேற்பையும், கிராமப்புற மக்களிடம் மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அதிக அளவு மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கும் நிலையில் , இந்த அறிவிப்பு  தேவை இல்லை என்பது எதிர்கட்சிகளின் வாதம்.  டெல்லியில் கெஜ்ரிவால் அரசு மின்சார கட்டணத்தை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுத்து. அதை தொடர்ந்து தமிழகத்தில் இத்தகைய திட்டம் அமலுக்கு கொண்டு வந்திருப்பது வரவேற்கவேண்டி ஒன்று தான். 

3.தாலிக்கு தங்கம் :

ஏற்கனவே  அமலில்  இருந்த  திட்டம் தான் , ஆனால் 4 gm இல்  இருந்து 8 gm ஆக உயர்த்தி அறிவித்து இருக்கிறது. திருமணமாகும் ஒவ்வொரு பெண்ணிற்கும் , 8 gm  தங்கம் இலவசமாக வழங்கப்படும் .

4. பயிர் கடன் தள்ளுபடி :

விவாசியிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருந்த பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததை  தொடர்ந்து, அதை ஆட்சியில் அமர்ந்தவுடன் அறிவிக்கவும் செய்தது தமிழக அரசு.

5.பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு :


அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய சத்துணவு எம்.ஜி .ஆர். அவர்களின் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு , இன்றும் தொடர்ந்து வருகிறது. இப்பொழுது, அதை  அடுத்து காலை உணவும் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது . குழந்தைகளுக்கு மாம்பழச்சாறு வழங்கும் திட்டம் , அவர்களின் உடல்நலத்திற்கு உகந்ததல்ல என்று அறிவுறுத்தலை தொடர்ந்து , அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனிவரும் நாட்களில் , தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பிற திட்டங்களை பற்றிய அறிவிப்புகள் வெளிவரும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.

Comments