Skip to main content
அதிமுக தேர்தல் அறிக்கை 2016 - ADMK Election manifesto 2016
அதிமுக தேர்தல் அறிக்கை - பகுதி 1
- விவசாயக் கடன்கள் முழுவதும் ரத்துசெய்யப்படும்..
- அடுத்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடி விவசாய கடன் வழங்கப்படும்..
- விவசாயிகளுக்கான முழு வட்டி மானியம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்..
- அவிநாசி அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும்..
- மீனவர்களுக்கான நிவாரண உதவித்தொகை 5 ஆயிரமாக உயர்த்தப்படும்..
- மீனவர்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க நடவடிக்கை..
- பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்படும்.. வழிகாட்டு நிர்ணய முறை சீரமைக்கப்படும்..
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை..
- சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட மாட்டாது..
- உள்நாட்டு மின் உற்பத்திக்கு தொடர்ந்து முக்கியத்துவம்..
- ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை.
அதிமுக தேர்தல் அறிக்கை - பகுதி 2
- தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்..
- மடிக்கணிணிகளுடன் கட்டணமில்லா இணைய வசதி..
- மகப்பேறு உதவித்தொகை 18 ஆயிரமாக உயர்வு..
- 100 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசம்..
- வீட்டுக்கு ஒருவருக்கு வேலை..
- பொங்கலுக்கு, கோ ஆப்டெக்சில் துணி வாங்க 500 ரூபாய்க்கு கூப்பன்..
- கூட்டுறவு கடன்கள் அனைத்தும் தள்ளுபடி..
- கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை உடனே வழங்கப்படும்..
- மகளிர்க்காக வாங்கும் ஸ்கூட்டர்களுக்கு 50 சதவிகிதம் மானியம்..
- ஏழை எளியோருக்கு அம்மா வங்கிக்கார்டுகள்..
- இலவச முழு உடல்பரிசோதனை அனைத்து மாவட்டங்களுக்கும் செயல்படுத்தப்படும்..
- அரசு ஊழியர்களின் ஊதிய முறை மாற்றியமைக்கப்படும்..
- படித்து வேலையில்லாமல் இருக்கும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து...
- வழக்கறிஞர்களின் சேமநல நிதி 7 லட்சமாக உயர்வு..
- மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதமாக நீட்டிக்கப்படும்..
- லோக் ஆயுக்தா அமைக்கப்படும்..
- புதிய கிராணைட் கொள்கை வகுக்கப்படும்.
Comments
Post a Comment