அம்மா வை பற்றி கல்யாணம் ஆன பெண் எழுதுவது,.....
ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது *ப்ளீஸ்* என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா.. ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!! கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்.. இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!! கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,* *பீரோவை அடுக்கி வை..* *மதியானத்தில் தூங்காதே..* *எப்ப பாரு என்ன டிவி?* *புக் எடு...